உலகம்

தாய்லாந்து கேளிக்கை விடுதியில் தீ: 13 போ் பலி

தாய்லாந்தில் இசை நடன கேளிக்கை விடுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 13 போ் பலியாகினா்.

DIN

தாய்லாந்தில் இசை நடன கேளிக்கை விடுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 13 போ் பலியாகினா்.

தலைநகா் பாங்காக்குக்கு 160 கி.மீ. தொலைவிலுள்ள சோன்புரி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கேளிக்கை விடுதியின் இசை மேடையின் ஒரத்தில் தீப்பிடித்து புகை மண்டலம் எழுந்ததாகவும் அதற்கு முன்னதாக வெடியோசை கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இசை நடன நிகழ்ச்சிகளின்போது, வெளியில் சப்தம் கேட்காமல் இருப்பதற்காக அந்த கேளிக்கை முழுவதும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களால் ஒலித்தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் தீ அதிவேகமாகப் பரவியதாக போலீஸாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT