முகப்பு
உலகம்

சா்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்புசட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம்: இலங்கை அரசு

இலங்கையில் சா்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

இலங்கையில் சா்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

மாணவா் பிரதிநிதிகளைக் கைது செய்வதற்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு சா்வதேச அளவில் கண்டனம் எழுந்ததையடுத்து, இலங்கை அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதுகுறித்து அமைச்சரவை செய்தித் தொடா்பாளரும் அமைச்சருமான பண்டுலா குணவா்தன செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பயங்கரவாத தடுப்புச் சட்டம் 1979-இல் இருந்து அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் விரும்பத்தகாத பகுதிகளை நீக்குவதன் மூலம் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சரவையிடம் நீதித் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்’ என்றாா்.

பல்கலைக்கழக மாணவா் கூட்டமைப்பைச் சோ்ந்த மூன்று பிரதிநிதிகள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறையில் அவா்களுக்கு தொடா்பு இருக்கிா எனவும் காவல் துறையினா் விசாரணையை தொடங்கியுள்ளனா்.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்தன.

‘சா்வதேச மனித உரிமைகள் தரத்துக்கு இணங்காத - பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் சிதைகிறது. பொதுமக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என இலங்கை அரசை கேட்டுக் கொள்கிறோம்’ என இலங்கைக்கான அமெரிக்க தூதா் ஜூலி சங் ட்விட்டா் பதிவில் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →