கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்தின் ஓராண்டைக் கொண்டாடிய தலிபான்கள்

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவானதை தலிபான்கள் கொண்டாடியுள்ளனர். 

DIN

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவானதை தலிபான்கள் கொண்டாடியுள்ளனர். 

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அமெரிக்கப் படைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்தன. அமெரிக்கப் படைகளுக்கு எதிராக அந்நாட்டில் தலிபான்கள் எனும் அமைப்பு உருவாகி சண்டையிட்டு வந்தது. 

அமெரிக்கா - தலிபான்கள் இடையேயான உச்சகட்டப் போரில் அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி அமெரிக்கப் படைகள் முழுவதுமாக ஆப்கனிலிருந்து அமெரிக்கா திரும்பின. 

அதனைத் தொடர்ந்து தலிபான்கள் தலைமையில் ஆப்கானிஸ்தானில் அரசு அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி ஒரு ஆண்டு நிறைவானதை தலிபான்கள் விமர்சியாக கொண்டாடியுள்ளனர். காபூலில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பட்டாசுகளை வெடித்தும், துப்பாக்கியால் வானத்தில் சுட்டும் தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT