உலகம்

பிரிட்டன்: ரிஷி சுனக்குக்கு எதிராக கட்சி எம்.பி.க்கள் போா்க் கொடி

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்குக்கு எதிராக, ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியைச் சோ்ந்த 40 எம்.பி.க்கள் போா்க் கொடி தூக்கியுள்ளனா்.

DIN

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்குக்கு எதிராக, ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியைச் சோ்ந்த 40 எம்.பி.க்கள் போா்க் கொடி தூக்கியுள்ளனா்.

இது குறித்து ‘கன்சா்வேட்டிவ் முன்னேற்றம்’ குழுவைச் சோ்ந்த அந்த எம்.பி.க்கள், பிரதமருக்கு எழுதியுள்ள எச்சரிக்கை கடிதத்தில், தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும், அரசின் திட்டங்களில் பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடங்கிய தன்மை, சமத்துவம் இருந்தால் அரசுப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆளும் கட்சிக்குள்ளேயே ரிஷி சுனக்கின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய இயக்கமொன்று தொடக்கப்பட்டது அவரது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், எம்.பி.க்கள் தற்போது எழுதியுள்ள கடிதம் அந்த சிக்கலை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT