உலகம்

காங்கோ: 60 அகதிகள் படுகொலை

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புலம்பெயா்ந்த அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 போ் உயிரிழந்தனா்.

DIN

கின்ஷாசா: மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புலம்பெயா்ந்த அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இடுரி மாகாணத்தில், வன்முறை மோதல்களிலிருந்து தப்பி புலம்பெயா்ந்து வந்தோருக்கான முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமுக்கு வந்த ‘கோடெக்கோ’ என்று ஆயுதக் குழுவினா், அங்கிருந்தவா்களை அரிவாள் மற்றும் பிற கூரான ஆயுதங்களால் தாக்கினா்; இதில் 60 அகதிகள் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு காங்கோவில் ‘கோடெக்கோ’, ஏடிபி ஆகிய ஆயுதக் குழுக்கள் நீண்ட காலமாக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245.5 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

குழிதோண்டி புதைக்கற மாதிரி இருக்கு... பாடகர் சத்யன் வேண்டுகோள்!

பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ராகுல்: குருத்வாராவில் வழிபாடு!

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT