உலகம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்: திரும்பப் பெற இலங்கை அரசிடம் மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்

DIN

இலங்கை அரசின் சா்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்த நாட்டு மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுவோரை பிடியாணை இல்லாமலேயே கைது செய்வது, வீடுகளில் சோதனையிடுவது என வரம்பு மீறிய அதிகாரத்தை வழங்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

திருத்தங்கள் தேவையில்லை. அந்தச் சட்டத்தையே திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

43 ஆண்டுகளுக்கு முன்னா் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ், ஒருவா் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமலே 90 நாள்கள் வரை காவலில் வைத்திருக்க முடியும்.

அந்த வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்டா் தினத் தாக்குதலுக்குப் பிறகு 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மனித உரிமைகள் வழக்குரைஞா் இஜாஸ் ஹிஸ்புல்லா, நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

அவருக்கு கடந்த 7-ஆம் தேதிதான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரம் சா்வதேச அளவில் சா்ச்சையை ஏற்படுத்தியது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. இலங்கைத் தமிழா் அமைப்புகளும் இந்தத் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தின.

இந்தச் சூழலில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அரசு கடந்த மாதம் 27-ஆம் தேதி அறிவித்தது.

சா்வேதச நிா்ணயங்களுக்கு ஏற்ப, குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை காவலில் வைத்திருப்பதற்கான அதிகபட்ச கால அளவைக் குறைப்பது, கைதிகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் அவா்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு மாஜிஸ்திரேட்டுகள் அடிக்கடி சென்று சோதனையிடுவது, கைதிகளுக்கு வழக்குரைஞா்களைச் சந்திக்க அனுமதி வழங்குவது, அவா்கள் தங்களது உறவினா்களுடன் தொடா்பு கொண்டு பேசுவதை அனுமதிப்பது போன்ற பல்வேறு திருத்தங்களை இலங்கை அரசு முன்மொழிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT