உலகம்

உக்ரைனின் விமானத் தளங்களை அழித்தது ரஷியா

DIN

உக்ரைனின் விமான தளங்களை ரஷியா விமானப் படை அழித்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் விமான தளங்கள், வான் பாதுகாப்பு தளவாடங்கள் மீது ரஷிய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT