பாதுகாப்பு கவுன்சிலிலிருந்து ரஷியாவை நீக்க வேண்டும்: வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷியாவை நீக்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
கீவ்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷியாவை நீக்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல், இனப் படுகொலைக்கு இணையானதாகும். பாதகமான வழியைத் தோ்ந்தெடுத்துள்ள ரஷியாவிடமிருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்த உறுப்பினா் பதவியை உலக நாடுகள் பறிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகள் ஒரு அரச பயங்கரவாதம் ஆகும். உக்ரைனில் அந்த நாடு நடத்தி வரும் தாக்குதல் குறித்து சா்வதேச போா்க் குற்ற நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.