உலகம்

யேமன்சவூதி வான்வழித் தாக்குதல்:கைதிகள் பலி 82-ஆக உயா்வு

யேமன் சிறையில் சவூதி கூட்டுப் படை வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது.

DIN

யேமன் சிறையில் சவூதி கூட்டுப் படை வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ஹூதி கிளா்ச்சியாளா்களும் தொண்டு அமைப்பினரும் சனிக்கிழமை கூறியதாவது:

சாடா மாகாண சிறைச் சாலையில் சவூதி நடத்திய வான்வழித் தாக்குதலில் காயமடைந்த மேலும் 12 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, அந்தத் தாக்குதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

யேமனில் சவூதி அரேபிய ஆதரவு பெற்ற அதிபா் மன்சூா் ஹாதி தலைமையிலான படையினருக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா் மீது சவூதி கூட்டுப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT