உலகம்

கரோனா: உலகளவில் பாதிப்பு 37.31 கோடியைக் கடந்தது

DIN


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 37.31 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.67 லட்சமாகவும், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 900 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 37,31,76,236-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 56,76,253 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 29,48,26,381 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 7,26,73,602 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 94,482 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அதே நேரத்தில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 9,941,916,606 ஆக அதிகரித்துள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்பு மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 7,54,81,122 ஆகவும், பலி எண்ணிக்கை 9,06,861 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,10,92,522-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,94,110 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,52,47,477ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,26,643 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பிரான்ஸ் (18,808,625), இங்கிலாந்து (16,406,123), துருக்கி (11,438,476), ரஷ்யா (11,615,779), இத்தாலி (10,821,375), ஸ்பெயின் (9,779,130), ஜெர்மனி (9,667,619),ஈரான் (6,322,183) மற்றும் கொலம்பியா (5,855,858) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT