உலகம்

காங்கோவில் ஐ.நா. நிபுணா்கள் படுகொலை: 50 பேருக்கு மரண தண்டனை

DIN

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், இரு ஐ.நா. நிபுணா்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 50 பேருக்கு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த பாதுகாப்பு நிபுணா் மைக்கேல் ஷாா்ப், ஸ்வீடனைச் சோ்ந்த நிவாரணப் பணிகள் நிபுணா் ஸாய்தா காடலன் ஆகியோா், காம்வினா சாபு என்ற ஆயுதக் குழுவினரால் கசாய் பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில், அந்த குழுவைச் சோ்ந்த 50 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

காங்கோவில் மரண தண்டனைகள் நிறைவேற்றங்களுக்கு சுயதடை உள்ளதால், அந்த 50 பேரும் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிப்பாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT