உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 37.52 கோடியைக் கடந்தது

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 37.52 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.68 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 37,52,40,488-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 56,81,744 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 29,65,34,147 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 7,30,24,597 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 94,601 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்பு மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 7,55,78,076 ஆகவும், பலி எண்ணிக்கை 9,07,190 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,13,02,440-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,95,050 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,53,51,489 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,26,923 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பிரான்ஸ் (19,058,073), இங்கிலாந்து (16,468,522), துருக்கி (11,526,621), ரஷ்யா (11,737,007), இத்தாலி (10,925,485), ஸ்பெயின் (9,779,130    ), ஜெர்மனி (9,776,648),ஈரான் (6,344,179) மற்றும் கொலம்பியா (5,871,977) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

என்ன சொல்கிறது இன்றைய தங்கம் விலை!

சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

SCROLL FOR NEXT