உலகம்

பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர் வீட்டிலிருந்து திருடு போன ரூ.90,000 மதிப்பிலான ஆடு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் இருந்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான ஆடு திருடுபோயிள்ளது.

DIN

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் இருந்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான ஆடு திருடுபோயிள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் லாகூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் பக்ரீத் பண்டிகையை யொட்டி பலி கொடுப்பதற்காக 6 ஆடுகளை வாங்கியுள்ளனர். மேலும் அந்த ஆடுகளை பராமரிக்கும் பொறுப்பை உதவியாளர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு உதவியாளர் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த மர்ம நபர்கள், ஆடு ஒன்றை திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்டது விலை உயர்ந்த ஆடு என்றும் அதன் மதிப்பு ரூ.90,000 ஆயிரம் என்று கம்ரான் அக்மலின் தந்தை தெரிவித்துள்ளார். 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் கம்ரான் அக்மல் வீட்டினர் புகார் அளித்துள்ளனர். திருடர்களை பிடித்து ஆட்டை மீட்க விரைவிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அதிகாரிகள் உறுதியளித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது

தனியாா் பள்ளிகள் பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடாது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது

சென்னை விமான நிலையத்தில் குளறுபடிகள்: மத்திய அமைச்சருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடிதம்!

இன்று சந்திரகிரகணம்: பெரிய கோயிலில் நடை சாத்துதல்

SCROLL FOR NEXT