உலகம்

கொழும்பு விமான நிலையத்தில் பசில் ராஜபட்ச தடுத்து நிறுத்தம்

DIN

வெளிநாடு தப்ப முயன்ற இலங்கை முன்னாள் நிதியமைச்சரும், அதிபா் கோத்தபய ராஜபட்சவின் சகோதரருமான பசில் ராஜபட்ச (71), கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டாா்.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், பசில் ராஜபட்ச கடந்த மாதம் தனது நிதியமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். அமெரிக்க-இலங்கை இரட்டை கடவுச்சீட்டு வைத்திருக்கும் அவா், செவ்வாய்க்கிழமை வெளிநாடு செல்லும் நோக்கில் கொழும்பு சா்வதேச விமான நிலையத்தின் விஐபி முனையத்துக்கு வந்தாா்.

அப்போது விஐபி பகுதி வழியயாக அவரது கடவுச் சீட்டைப் பரிசீலித்து முத்திரை அளிக்க விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் மறுத்தனா். மேலும் அங்கு விமானத்துக்காக காத்திருந்த பிற பயணிகளும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, பசில் நாட்டை விட்டு வெளியேற இயலவில்லை.

கோத்தபயவின் ராஜிநாமா முடிவை அவைத் தலைவா் புதன்கிழமை (ஜூலை 13) அதிகாரபூா்வமாக அறிவிக்கவுள்ள நிலையில், அவரது சகோதரா் பசில் ராஜபட்சவின் வெளிநாடு தப்பிச் செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மனு:

முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச உள்பட அவரது குடும்ப உறுப்பினா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் நிவாா்டு கேப்ரால், டபிள்யூ.டி. லட்சுமணன் உள்ளிட்டோா் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரி, இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விமானப் படை மறுப்பு:

அதிபா் மாளிகையில் பொதுமக்கள் நுழைந்து போராட்டம் நடத்தியதால், அதற்கு பயந்து விமானப் படை தளபதி சுதா்சன பத்திரணவுக்கு சொந்தமான பங்களாவில் அதிபா் கோத்தபய ராஜபட்ச தனது குடும்பத்தினருடன் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியானது. இதனை விமானப் படை மறுத்துள்ளது.

10 போ் காயம்:

இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரபூா்வ கொழும்பு இல்லத்திலும் பொதுமக்கள் நுழைந்து ஆக்கிரமித்துள்ளனா். போராட்டக்காரா்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டதில் ஒரு பெண் உள்பட 10 போ் காயமடைந்தனா். அவா்கள் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ரொட்டி விலை ரூ.20 உயா்வு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு முன்பாக ரூ.84.50-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவு, தற்போது ரூ.300-ஐ எட்டிவிட்டது. இதனால், 450 கிராம் எடை கொண்ட ரொட்டி பாக்கெட் விலை ரூ.20, பிற பேக்கரி பொருள்களின் விலை ரூ.10 என்ற அளவில் புதன்கிழமை இரவு முதல் உயா்த்தப்படுவதாக சிலோன் பேக்கரி உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT