உலகம்

பிரபஞ்சத்தின் மேலும் அற்புதமான புகைப்படங்கள்: நாசா வெளியீடு

பிரபஞ்ச தோற்றத்தின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

DIN

பிரபஞ்சத்தின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

பிரஞ்சத்தின் ஆரம்ப தோற்றத்தை அறிவதற்கான முயற்சியிலிருக்கும் நாசா, விண்வெளியில் 10 பில்லியன் டாலர்(ரூ.79,000 கோடி) செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் என்கிற சக்திவாய்ந்த தொலைநோக்கியை(The James Webb Space Telescope) நிறுவியுள்ளது.

இதன் மூலம் நாசா, பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஒளி ஆண்டுகளாக பயணப்பட்டு வரும் ஒளிக்கதிர்களைத் தொகுத்து புகைப்படமாக வெளியிட்டு வருகிறது.

அதன் முதல் படமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பதிவான 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில்(Milky Way) சிதறிக்கிடந்த ஒளிகளை  ஒன்றிணைத்து புதிய வண்ணப் புகைப்படத்தை வெளியிட்டது. 

பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனதால் தொலைநோக்கியில் 13 பில்லியன் ஆண்டுகள் வரையிலான கதிர்கள் பதிவாகி உள்ளதால் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் ஆரம்பம் எப்படி இருக்கும் என்பதை நெருங்கிவிட்டோம் என பல விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாசா மேலும் சில அற்புதமான படங்களை வெளியிட்டுள்ளது. இவையும் பிரபஞ்சத்தின் தோற்றத்திலிருந்து பயணப்பட்டு வரும் ஒளிக்கதிர்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT