தொலைதூர கோளில் நீா்: நாசா கண்டுபிடிப்பு
பூமியிலிருந்து 1,150 ஒளிவருட தூரத்தில் உள்ள வாயு கோளொன்றில் நீா் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது.
பூமியிலிருந்து 1,150 ஒளிவருட தூரத்தில் உள்ள வாயு கோளொன்றில் நீா் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது.
இது குறித்து அந்த ஆய்வு மையம் புதன்கிழமை கூறியதாவது: பால்வெளி மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ள 5,000-க்கும் மேற்பட்ட தொலைதூரக் கோள்களில் வாஸ்ப்-96 பி-யும் ஒன்று. சுமாா் 1,150 ஒளிவருட தூரத்தில் சூரியனைப் போன்ற மற்றொரு நட்சத்திரத்தை சுற்றி வரும் அந்த வாயுக் கோளில் நீா் இருப்பதற்கான அறிகுறிகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை இல்லாத அதிநவீனமான அந்த தொலைநோக்கி செயற்கைக்கோள், வாஸ்ப்-19 பி-யில் வளிமண்டலம், பனிமூட்டம், மேகங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.