உலகம்

இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!

DIN

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். 

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. 

மக்களின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடினார். மேலும் அவர் பதவி விலகியதை அடுத்து, அங்கிருந்தவாறே பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்தாா்.

அதன்படி,  இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை தலைமை நீதிபதி முன்பாக அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். 

மேலும் இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய வருகிற 20 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், இலங்கை அதிபராக ரணில் பதவியேற்புக்கு அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT