உலகம்

உக்ரைனின் டோரிட்ஸ் நகரில் ரஷியா தாக்குதல்: 6 பேர் பலி

உக்ரைனின் டோரிட்ஸ் நகரில் திங்கள்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

IANS

கீவ்: உக்ரைனின் டோரிட்ஸ் நகரில் திங்கள்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், இன்று காலை முதல் டோரிட்ஸ் நகரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் நகரில் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தில் இருந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவற்றில், ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்த கட்டடத்தில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT