உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷியா ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடர்ந்து நடைப்பெற்று வருகிற சூழலில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பல அடுக்குமாடி கட்டடங்கள், அலுவலகங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.
மேலும், நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ரஷியப் படைகள் டோரிட்ஸ் நகரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிக்கலாம்: உக்ரைனின் டோரிட்ஸ் நகரில் ரஷியா தாக்குதல்: 6 பேர் பலி
இந்த தாக்குதலில் நகரில் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தில் இருந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், டொனட்ஸ்க் பகுதியில் உள்ள மைய நகரமான கிராமடோர்ஸ்க்கில் ரஷியப் படை ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கட்டடங்கள் மற்றும் பொது வழிகளில் இத்தாக்குதல் நடைபெற்று வருவதால் உயிர் சேதாரங்கள் அதிகரிக்கும் என உக்ரைன் அரசு கவலை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.