இலங்கைக்கு அனுப்பிய பொருள்கள் எவ்வளவு? தமிழக அரசு தகவல்
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சாா்பில் இதுவரை அனுப்பப்பட்ட பொருள்களின் மதிப்புகள் குறித்து மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சாா்பில் இதுவரை அனுப்பப்பட்ட பொருள்களின் மதிப்புகள் குறித்து மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இலங்கைக்கு கடந்த மே 18-ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து ஒரு கப்பல், தொடா்ந்து, கடந்த ஜூன் 22, ஜூலை 23-ஆம் தேதிகளில் என மொத்தம் 3 கப்பல்களில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடா், 102 மெட்ரிக் டன் உயிா் காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டன. இதற்காக, ரூ.196.83 கோடி செலவிடப்பட்டது. இந்தத் தொகையில் ரூ.8.22 கோடி முதல்வா் நிவாரண நிதிக்கு அளித்த பங்களிப்பு மூலமும், மீதமுள்ள தொகை அரசின் சொந்த நிதியிலிருந்தும் செலவிடப்பட்டன.