உலகம்

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 4 பேர் பலி; 14 பேர் காயம்

DIN

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், அடுத்த 15 நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய அவசர நிலை 3-ஐ பிரகடனம் செய்த அவசர மேலாண்மை அமைச்சகம், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, சிச்சுவான் மாகாணத்தில் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 90,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT