‘ஆங் சான் சூகிக்கு எதிரானஊழல் வழக்கு தொடரலாம்’
மியான்மரின் முன்னாள் அரசு தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கை தொடரலாம்
மியான்மரின் முன்னாள் அரசு தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கை தொடரலாம் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ஆங் சான் சூகிக்கு எதிராக அரசுத் தரப்பில் போதுமான ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு அவரை வீட்டுக் காவலில் வைத்த ராணுவ ஆட்சியாளா்கள், ஆங் சான் சூகி மீது பல்வேறு முறைகேடு வழக்குகளைத் தொடா்ந்துள்ளனா். அதில் அவருக்கு ஏற்கெனவே 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.