உலகம்

உக்ரைனின் சியெவெரோடொனட்ஸ்க் நகரில் ரஷியா கடும் தாக்குதல்

DIN

உக்ரைனின்  முக்கிய நகரங்களில் ஒன்றான சியெவெரோடொனட்ஸ்க் நகரில் ரஷியப் படையினர் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய கண்டம் கண்டுள்ள மிக மோசமான போரான உக்ரைன் போா் தொடங்கி 100 நாள்களைக் கடந்துள்ளது.

இந்த 100 நாள்களில், உக்ரைனின் புச்சா நகர வீதிகளில் கிடந்த பொதுமக்களின் சடலங்கள், ‘சிறுவா்கள்’ என்று எழுதப்பட்டிருந்தும் குண்டுவீச்சில் தரைமட்டமான மரியுபோல் திரையங்கு, ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த க்ரமாடோா்ஸ்க் ரயில் நிலையம் என்ற பல்வேறு காட்சிகள் உலகை அதிரச் செய்துள்ளன.

தற்போது, கிழக்கு உக்ரைனில் உள்ள சியெவெரோடொனட்ஸ்க் மற்றும் லிசிசன்ஸ்க் ஆகிய இரு நகரங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ரஷியப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். இதில் 80% இடங்களைக் கைப்பற்றி விட்டதாகவும்,  சியெவெரோடொனட்ஸ்க் நகரில் ரஷியா கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாக்குதலில் ஏவுகணைகள் பயன்படுத்தபட்டதால் சில கட்டடங்கள் குழுங்கியதாகவும் தகவல் வெளியானது.

முன்னதாக, கானொலி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி “கிட்டத்தட்ட முழு ரஷிய ராணுவத்திற்கு எதிராக நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.  அனைத்து ரஷிய ராணுவ அமைப்புகளும் ஈடுபட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பில் உக்ரைனின்  20 சதவீத நிலப்பரப்பை ரஷியப்படையினர் ஆக்கிரமித்துள்ளனர்” என்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT