உலகம்

பிரிட்டன் : எரிக்கப்படும் ரூ.38,600 கோடி கரோனா கவசப் பொருள்கள்

DIN

பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள 400 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.38,600 கோடி) மதிப்பிலான தரமற்ற கரோனா கவசப் பொருள்களை எரித்து மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அவசரகதியில் வாங்கப்பட்ட முகக் கவசம், கரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசின் செலவீனங்களைக் கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழு இது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை வீணாக்கப்பட்டது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள அந்தக் குழு, கரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT