உலகம்

21-ஆவது சட்டத்திருத்தம்:இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

DIN

இலங்கையில் நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் 21-ஆவது சட்டத்திருத்தத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இலங்கையில் அரசமைப்பின் 19-ஆவது சட்டத்திருத்தம் ரத்து செய்யப்பட்டு 20ஏ சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்திருத்தம் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளவில்லா அதிகாரத்தை வழங்குகிறது. இந்நிலையில், 20ஏ சட்டத்திருத்தத்தை நீக்கி, அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்கவும் நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கவும் 21-ஆவது சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சா் ஹரின் ஃபொ்னாண்டோ ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

21-ஆவது சட்டத்திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்தச் சட்டத்திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

இதுமட்டுமின்றி 21ஏ சட்டத்திருத்தத்துக்கும் அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று இலங்கை அரசமைப்பு விவகாரங்கள் துறை அமைச்சா் விஜேதாச ராஜபட்ச தெரிவித்துள்ளாா்.

21ஏ சட்டத்திருத்தத்தின்படி, இலங்கை அதிபா், அந்நாட்டு அமைச்சா்கள் நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவா்கள் ஆவாா்கள். அத்துடன் 15 குழுக்கள் மற்றும் மேற்பாா்வைக் குழுக்களும் நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டவையாக இருக்கும்.

இரு நாட்டு குடியுரிமையைப் பெற்றவா்கள் இலங்கை தோ்தல்களில் போட்டியிடவும் அந்தச் சட்டத்திருத்தம் தடை விதிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT