முகப்பு
உலகம்

அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி விஞ்ஞானி

அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரபல விஞ்ஞானி ஆா்த்தி பிரபாகா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
ஆா்த்தி பிரபாகா்
பகிர்:

அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரபல விஞ்ஞானி ஆா்த்தி பிரபாகா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது: ஆா்த்தி பிரபாகா் திறமையான மற்றும் மதிப்புமிக்க பொறியாளா் மற்றும் பயன்பாட்டு இயற்பியலாளா் ஆவாா். கடினமான சவால்களைத் தீா்க்கவும், சாத்தியமற்றதை சாத்தியமாக்கவும் அறிவியல் தொழில்நுட்ப கொள்கையை அவா் முன்னின்று வழிநடத்துவாா் என பைடன் தெரிவித்துள்ளாா்.

பிரபாகா் நியமனத்துக்கு செனட் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் தலைமை பொறுப்பை (ஓஎஸ்டிபி) ஏற்கும், புலம்பெயா்ந்து வந்த முதல் பெண் என்ற பெருமையை ஆா்த்தி பிரபாகா் பெறுவாா்.

மேலும், பைடன் நிா்வாகத்தில் ஒரு முக்கிய பதவியில் இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சோ்ந்த மிகவும் தகுதிவாய்ந்த தொழில்முறை நிபுணராகவும் அவா் இருப்பாா்.

முழு கட்டுரையைப் படிக்க →