உலகம்

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புகிறது ஆஸ்திரேலியா

உக்ரைன்-ரஷியா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்ப ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.

DIN

உக்ரைன்-ரஷியா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்ப ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.

உக்ரைனில் 6வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. 

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களும் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். 

இந்நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலியா ஆயுதங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

மேலும் , உக்ரைனுக்கு சில  ஐரோப்பிய நாடுகள் போர் விமானங்களைத் தர முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

பிகாரில் நவ. 6-இல் வாக்குப்பதிவு: பிரசாரம் முடிவு!

SCROLL FOR NEXT