உலகம்

உக்ரைன் போர்: கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

DIN

உக்ரைன் நாட்டின் கீவ் நகரை ரஷிய ராணுவம் முழுமையாக கைப்பற்றிய நிலையில், கீவ் நகரிலுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலைப் பயன்படுத்தி ரயில் உள்ளிட்ட கிடைக்கக்கூடிய போக்குவரத்தைப் பயன்படுத்தி இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே கீவ் நகரிலிருந்த இந்திய மாணவர்கள் உக்ரைன் எல்லைப் பகுதிகளுக்குச் சென்றுவிட்ட நிலையில், ரஷிய ராணுவம் கீவ் நகரைக் கைப்பற்ற முயற்சி செய்து வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுறுவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

உக்ரைன் நாட்டில் தொடர் போர்ப்பதற்றம் நிலவி வருவதால், அந்நாட்டிலுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.  

இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களும் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். 

இந்நிலையில் கீவ் நகரில் சில இடங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியதால், அந்நகரிலுள்ள இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உக்ரைனிலுள்ள இந்தியத் தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

எவ்விதமான போக்குவரத்தாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி மக்கள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT