உலகம்

'நான்கு சி-17 விமானங்கள் மூலமாக 798 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்' - இந்திய விமானப்படை

DIN

இந்திய விமானப்படையின் முதல் நான்கு சி-17 விமானங்கள் மூலமாக 798 பேர் உக்ரைனில் இருந்து அழைத்துவரப்பட்டுளளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 7-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

அந்தவகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 

மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலாந்து, ரோமானியா,  ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டதுடன் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்திய  சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். 

ஏற்கெனவே, இந்தியர்களை மீட்கும் பணியான 'ஆப்பரேஷன் கங்கா' திட்டத்தில் உள்ள ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட்டுடன் இந்திய விமானப்படையின் விமானங்களும் களமிறங்கியுள்ளன.இதற்காக விமானப்படையின் சி-17 விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி இதுவரை இந்திய விமானப்படையின் முதல் நான்கு சி-17 விமானங்கள் மூலமாக ரோமானியா, ஹங்கேரி, போலந்து வழியாக 798 பேர் உக்ரைனில் இருந்து அழைத்துவரப்பட்டுளளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. தாயகம் வந்த இந்தியர்களை மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் வரவேற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT