உலகம்

ஆப்கனில் வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தும் தலிபான் அரசு

IANS

காபூல்: ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் அனைவரும், அரசின் சொத்துக்களை வைத்திருந்தாலோ, ஆயுதங்களை வைத்திருந்தாலோ அதனை ஒப்படைத்துவிடுமாறு தலிபான் அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், இதே காரணத்தை முன்னிட்டு காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

அரசுக்குச் சொந்தமான பொருள்களை மக்கள் வைத்திருந்தால், அவர்களே தாமாக முன் வந்து அவற்றை ஒப்படைத்துவிடலாம் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. தேடுதல் குழுவினர், உங்கள் வீட்டுக்கு வருவதற்கு முன்பே, வீட்டில் ஆயுதங்களோ, அரசு சொத்துகளோ, சட்டவிரோதப் பொருள்களோ இருந்தால் அவற்றை ஒப்படைத்துவிடுவது நல்லது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை பல நூற்றுக்கணக்கான ஆயுதங்களை காபூலில் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் தலிபான் அரசு கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT