உலகம்

ரஷியாவில் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட சேவைகளை நிறுத்தியது டிக் டாக்

ரஷியாவில் தற்காலிகமாக புதிதாக விடியோக்களை பதிவிடுவது மற்றும் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட சேவைகளை நிறுத்துவதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN


ரஷியாவில் தற்காலிகமாக புதிதாக விடியோக்களை பதிவிடுவது மற்றும் நேரடி ஒளிபரப்பு உள்ளிட்ட சேவைகளை நிறுத்துவதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷியப் படைகளுக்கு எதிராக போலியான தகவல்களை வெளியிடுவோருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா மீது அதிபர் புதின் சமீபத்தில் கையெழுத்திட்டார். 

இதையடுத்து பணியாளர்கள் பாதுகாப்பு கருதி நேரலை ஒளிபரப்பு மற்றும் புதிதாக விடியோக்கள் பதிவிடுவதை தற்காலிகமாக  நிறுத்திக் கொள்வதாக டிக் டாக் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

அதேநேரத்தில் செய்தி பகிர்வு தடை செய்யப்படாது என்றும் சேவைகள் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட்டவுடன் முழுவீச்சில் மீண்டும் தனது சேவையைத் தொடங்கும் என டிக் டாக் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் உடனான மோதலின் விளைவாக, "எங்கள் விளையாட்டுகளில் ரஷியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாக" எபிக் தனது நியூஸ்ரூம் கணக்கிலிருந்து ஒரு ட்வீட்டில்  தெரிவித்துள்ளது. 

ஜப்பானிய கேமிங் நிறுவனமான நிண்டெண்டோ ரஷியாவுக்கான தனது இ-வர்த்தகத்தை பராமரிப்பு பயன்முறையில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், "தனது தயாரிப்புகள் மற்றும் புதிய விற்பனை சேவைகள்" அனைத்துயும் நிறுத்தி வைத்துள்ளது. 

ஏற்கனவே, ட்விட்டர், யுடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT