எர்னெஸ்டோ சேகுவேரா 
உலகம்

சேகுவேராவை சுட்டுக்கொன்றவர் மரணம்

கியூபாவின் புரட்சியாளர்களில் ஒருவரான சேகுவேராவைக் சுட்டுக்கொன்றவர் உடல்நிலை காரணமாக உயிரிழந்தார்.

DIN

கியூபாவின் புரட்சியாளர்களில் ஒருவரான சேகுவேராவைக் சுட்டுக்கொன்றவர் உடல்நிலை காரணமாக உயிரிழந்தார்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற  போராடியவர் எர்னெஸ்டோ சேகுவேரா.

பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சேகுவேரா இறுதியாக கொரில்லா போரை நடத்தும் பொருட்டு 1967 ஆம் ஆண்டு பொலிவியா நாட்டிற்குள் நுழைந்தார்.

அதே ஆண்டு பொலியாவின் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்த சேகுவேராவை பொலிவிய ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

பின், கைது செய்யப்பட்ட சேகுவேராவை மரியோ டெரன் சலாசர் என்கிற பொலிவிய ராணுவ வீரர் சுட்டுக்கொன்றார். 

இந்த நிகழ்வு முடிந்து 54 ஆண்டுகள் கடந்த நிலையில்  மரியோ டெரன்(80) புரோஸ்டேட் புற்றுநோய் காரணமாக நேற்று(மார்ச்-10) பொலியாவில் உயிரிழந்தார்.

சேகுவேராவைச் சுட்டுக்கொன்ற பின் அந்த நிகழ்வை டெரன் ‘அது என் வாழ்க்கையின் மிக மோசமான தருணம். அந்த நேரத்தில் நான் 'சே'-வை மிகப்பெரியவராகப் பார்த்தேன். அவரது கண்கள் பிரகாசமாக இருந்தது. பதற்றப்படமால் என்னை குறிவைத்துச் சுடு என அவர் சொன்னார். நான் சுட்டேன்’ என விவரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

SCROLL FOR NEXT