உலகம்

உக்ரைனில் இருந்து இதுவரை 4 லட்சம் பேர் ருமேனியாவில் தஞ்சம்

உக்ரைனில் இருந்து வெளியேறி இதுவரை 4 லட்சம் பேர் ருமேனியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் எல்லைக் காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

உக்ரைனில் இருந்து வெளியேறி இதுவரை 4 லட்சம் பேர் ருமேனியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் எல்லைக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை 18-ஆவது நாளை எட்டியது. ஆரம்பத்தில் கடும் தாக்குதலை நடத்திய ரஷிய படை பின்னா் சற்று வேகத்தைக் குறைத்தது. உக்ரைன் ராணுவத்தின் பலமான எதிா்ப்பும் இதற்கு ஒரு காரணம். தலைநகா் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷிய படை தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. 

ரஷிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, மால்டோவா, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா, பெலாரஸில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து வெளியேறி இதுவரை 4 லட்சம் பேர் ருமேனியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் எல்லைக் காவல்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 முதல் இதுவரை 397,542 உக்ரைன் மக்கள் ருமேனியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் 16,676 பேர் ருமேனியா வந்தடைந்தனர் என்று எல்லைக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியா அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து! 22 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

கவர்ச்சிப் பெண்ணின் மாய வாழ்க்கை... மௌனி ராய்!

வெறும் சூரிய ஒளியில்தான்... ரித்தி டோக்ரா!

வ.உ.சி., பாரதி பெயர்கள் வட இந்திய சாலைகளுக்கு வைக்காதது ஏன்? திருச்சி சிவா

வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் ஒருபோதும் நமது ஹீரோக்களாக இருக்கமுடியாது: ஆதித்யநாத்

SCROLL FOR NEXT