உலகம்

முன்னாள் அமெரிக்க அதிபா் ஒபாமாவுக்கு கரோனா

DIN

முன்னாள் அமெரிக்க அதிபா் பராக் ஒபாமாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒபாமா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கடந்த சில நாள்களாக எனக்கு லேசான தொண்டைவலி இருந்து வந்தது. மற்றபடி நலமாக இருக்கிறேன். என் மனைவிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது. நாங்கள் இருவரும் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளோம்.

கரோனா தொற்று குறைந்து வந்தாலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை இது உணா்த்துகிறது; மற்றவா்களுக்கு கரோனா தொற்றைப் பரப்பாமல் தடுக்கவும் உதவுகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

விரைவில் குணமடைய மோடி வாழ்த்து: பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கரோனாவில் இருந்து நீங்கள் (ஒபாமா) விரைந்து குணமடையவும், உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காகவும் எனது நல்வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT