கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய நாடு 
உலகம்

கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய நாடு

கரோனா பேரிடரின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

PTI


இஸ்லாமாபாத்: கரோனா பேரிடரின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டு திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசத் உமர் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருமணம், உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், சந்தைகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து விதமான கட்டுப்பாடுகளுக்கும் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதேவேளையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டும் நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் நீக்கிக் கொள்ளப்படுவதால், கரோனா பேரிடர் முடிந்துவிட்டதாக அர்த்தமாகாது, அரசு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, சூழ்நிலைக்கு ஏற்ப மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

புலிக்கூடு புத்த தலத்தில்... ருசிரா ஜாதவ்!

ஜிம் லைஃப்... அனைரா குப்தா!

சேலையே பாதி மாயம் செய்யும்... கல்பனா சர்மா!

SCROLL FOR NEXT