உலகம்

தொடரும் பொருளாதார நெருக்கடி: சீனாவிடம் கடனுதவி கேட்கும் இலங்கை

DIN

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை மீண்டும் சீனாவிடம் கடனுதவி கேட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை. இதனால் இலங்கையின் ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சுற்றுலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதன் விளைவாக, இலங்கையின் அந்நிய செலாவணி வரத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. 

சீனா உள்பட பல நாடுகளின் கடன் வலையில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. நாட்டில் உணவுப் பிரச்னை மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.

மேலும், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதுடன், பணவீக்கத்தின் தாக்கம் பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில், சீனா உள்பட பல நாடுகளின் கடனில் சிக்கியுள்ள இலங்கை, தற்போது திவாலாகும் நிலையை எட்டியுள்ளதால், மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தினசரி உணவுப் பொருள்கள் வரலாறு காணாத விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, பருப்பு கிலோ ரூ.250, சர்க்கரை ரூ.215, உருளைக்கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400, உளுந்து கிலோ ரூ.2,000, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.35  அதிகரித்துள்ளது. 

முன்னதாக, கடும் பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை இந்திய அரசிடம் உதவி கேட்ட நிலையில் அத்தியாவசிய பொருள்களை வாங்க ரூ.7,500 கோடி கடனுதவி வழங்க இந்தியா முன்வந்ததுடன் இதுதொடர்பாக இரு நாட்டிற்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்நிலையில், தொடரும் பொருளாதார நெருக்கடியால் மீண்டும் சீனாவிடன் இலங்கை அரசு ரூ.19,000(2.5 பில்லியன் டாலர்) கோடி கடனுதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT