உலகம்

உக்ரைன் போர்: நாளை(மார்ச் 23) ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வு

DIN

உக்ரைன் போர் தொடர்பாக ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வுக் கூட்டம் நாளை (மார்ச் 23) ஆம் தேதி நடைபெற உள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் மூன்று வாரங்களைக் கடந்துள்ளது. உக்ரைன் முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் ரஷியப் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாட்டு அதிபர்களிடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. போரை நிறுத்த வேண்டும் என ரஷியாவிடம் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் உக்ரைன் போர் தொடர்பாக  ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வுக் கூட்டம் நாளை (மார்ச் 23) ஆம் தேதி நடைபெற உள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 22 உறுப்பு நாடுகள், ஐ.நா தலைவர் அப்துல்லா ஷாஹிதிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இந்த சிறப்பு அமர்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஐ.நா அமைப்பில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT