உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 47.54 கோடியாக அதிகரிப்பு!

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47.54   கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 61 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்த வண்ணம் இருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்து வந்த நிலையில், சில நாள்களாக மீண்டு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் கடைப்பிடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 476,533,148 -ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 6,128,393 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 41,17,94,193 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 5,85,49,884  போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 60,678 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 81,527,329    -ஆகவும் பலி எண்ணிக்‍கை 10,01,175 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 43,014,687     ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 516,703 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,97,29,991 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,58,067    பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை செலுத்தப்பட்டகரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை10,83,54,08,738 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT