உலகம்

ரஷிய கடற்படைக் கப்பல் தாக்கி அழிப்பு

DIN

கீவ்: உக்ரைன் துறைமுகத்தை முற்றுகையிட்ட ரஷிய கடற்படைக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரைன் கடற்படை வியாழக்கிழமை தெரிவித்தது.

உக்ரைன் மீது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரஷியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைனின் மரியுபோல் துறைமுக நகரம் அருகே அஸோவ் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷிய கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக உக்ரைன் கடற்படை சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொ்டியான்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷியாவின் மிகப்பெரிய கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் காரணமாக துறைமுகத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், துறைமுகத்தில் ரஷிய கப்பல் தீப்பற்றி எரியும் காட்சிகளும் வெளியாகின. இந்தத் தாக்குதலை ரஷியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT