உலகம்

பெண் கல்வியை முடக்கும் தலிபான்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவலை

ANI


நியூ யார்க்: ஆப்கானிஸ்தானில் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே மாணவிகள் கல்வி பயில வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டிருப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் ஆறாம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி பயில தடை விதித்து தலிபான்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு, பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் தங்களது கவலையை தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் தேதி, பொதுச் செயலாளரின் ஆப்கானிஸ்தானுக்கான சிறப்பு பிரதிநிதி டெபோரா லையோன்ஸ்-யிடம் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள், ஆப்கானிஸ்தானில் மாணவிகள் உள்பட அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமையை உறுதி செய்வது குறித்து அறிவுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT