முகப்பு
உலகம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Updated On : 31 மார்ச், 2022 at 1:06 PM
செந்தில் தொண்டமான்
பகிர்:

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 2020 மே மாதத்தில் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்குப் பிறகு இந்தப் பதவிப் பொறுப்பு நிரப்பப்படாமலேயே இருந்தது.

தற்போது,  கோட்டகல தலைமையகத்தில் புதன்கிழமை  கூடிய கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஏற்கெனவே கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்தவர் செந்தில் தொண்டமான்.

மேலும், கட்சியின் அவைத் தலைவர் மற்றும் பொருளாளராக எம். ராமேசுவரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிக மோசமான பொருளாதாரச் சூழலை இலங்கை கடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்பது குறிப்பிடத் தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.