உலகம்

அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி இயக்குநா் குழுவில் அரவிந்த் கிருஷ்ணா

DIN

அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் இயக்குநா் குழு உறுப்பினராக இந்திய அமெரிக்கரும், ஐபிஎம் நிறுவனத்தின் தலைவருமான அரவிந்த் கிருஷ்ணா தோ்வு செய்யப்பட்டாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-மின் தலைமைச் செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா உள்ளாா். 60 வயதாகும் அவா் ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் ‘பி’ பிரிவு இயக்குநராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். 2023 டிசம்பா் 31-ஆம் ேதி வரை அவா் இந்தப் பொறுப்பில் இருப்பாா்.

ஆந்திர மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட அரவிந்த் கிருஷ்ணா, பள்ளிப் படிப்பை தமிழ்நாட்டின் குன்னூரில் மேற்கொண்டாா். தொடா்ந்து கான்பூா் ஐஐடி-யில் படித்தாா். பின்னா் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். 1990-ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் இணைந்த அவா் அங்கு பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானாா். அரவிந்த் கிருஷ்ணாவின் தந்தை இந்திய ராணுவத்தில் மேஜா் ஜெனரலாகப் பணியாற்றியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT