அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் 
உலகம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுக்கு கரோனா

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

DIN

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்  வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்டனி பிளிங்கன் புதன்கிழமை பிற்பகல் பி.சி.ஆர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் ஆன்டனி பிளிங்கன் ஏற்கனவே முழுமையான தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டு உள்ளதால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. 

லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவித்து வருகிறார். இன்று புதன்கிழமை காலையிலும் அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு லேசான அறிகுறியே காணப்படுவதால் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வந்து தனது பணிகள் மற்றும் பயணங்களைத் தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே வெளியுறவுத் துறை பணியாளர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் உலகம் முழுவதும் முன்னுதாரணமாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ஆன்டனி பிளிங்கன் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சில வாரங்கள் மற்றும் மாதங்களில் கரோனா தொற்று பாதித்த பல உயரதிகாரிகள் பட்டியலில் பிளிங்கனும் இணைந்துள்ளார். கடந்த மாதம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார், மார்ச் மாதம், வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் சாகி தொற்றால் பாதிக்கப்பட்டார், இரண்டாவது முறையாக தொற்று உறுதியானதை அடுத்து அதிபர் ஜோ பைடனுடனான பெல்ஜியம் மற்றும் போலந்துக்கு பயணத்துக்கான தனது திட்டத்தை ரத்து செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT