கியூபா: ஹவானா சரடோகா உணவகத்தில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு குழந்தை உள்பட 22 பேர் பலியாகினர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சரடோகா உணவகத்தில் சுற்றுலாப் பயணிகள் யாரும் தங்கவில்லை எனவும் ஏனெனில் அங்கு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாக ஹவானா அரசு கூறியுள்ளது.
இந்த வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட உணவகத்துக்கு அருகில் உள்ள குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கியூபா அதிபர் டியாஸ்-கனெல் தெரிவித்தார்.
உணவகத்துக்கு இயற்கை எரிவாயு விநியோகித்து கொண்டிருந்த லாரி வெடித்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக கியூபா அரசு தொலைக்காட்சி தெரிவித்ததுள்ளது. ஆனால் எரிவாயு எப்படி தீப்பிடித்தது என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை.
மேலும், உணவகத்தின் அருகே செயல்பட்டு வந்த பள்ளிக்கூடத்தில் விபத்தால் பயங்கர சேதம் ஏற்பட்டது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர்.
கியூபா சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.