உலகம்

இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதா? - இந்தியத் தூதரகம் விளக்கம்

இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதாக வந்த தகவல் தவறானது என்று இந்தியத் தூதரகம் விளக்கமளித்துள்ளது. 

DIN

இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதாக வந்த தகவல் தவறானது என்று இந்தியத் தூதரகம் விளக்கமளித்துள்ளது. 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையையடுத்து பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். 

இலங்கையின் அசாதாரண சூழ்நிலைகளுக்கு இடையே, இந்தியா வருவதற்கு விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது. 

'இலங்கை மக்கள் இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசா நிறுத்தப்பட்டதாக வந்த செய்தியை இந்திய தூதரகம் மாறுகிறது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசா வழங்கும் பொறியில் பெரும்பாலான ஊழியர்கள்(இலங்கையைச் சேர்ந்தவர்கள்) வராததால் விசா வழங்கும் பணியில் நடைமுறை ரீதியான சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கை மக்களுக்கு தொடர்ந்து விசா வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. 

இந்தியாவுக்கான பயணத்தை இலங்கையர்கள் இலகுவாக மேற்கொள்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு உறுதிபூண்டுள்ளோம். இலங்கையில் இந்தியர்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப்போலவே இலங்கையர்களும் இந்தியாவில் வரவேற்கப்படுகிறார்கள்' என்று கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

SCROLL FOR NEXT