உலகம்

ஆஸ்திரேலிய பொதுத்தேர்தல்: பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி

DIN

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வியைத் தழுவியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இன்று நேரடித் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில் இந்தத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கூட்டணியை வீழ்த்தி மத்திய-இடது தொழிலாளர் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

அதனைத் தொடர்ந்து 31ஆவது புதிய பிரதமராக அந்தோனி அல்பனீஸ் பொறுப்பேற்க உள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று லிபரல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக மோரிசன் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் புதிதாக பிரதமராக பொறுப்பேற்க உள்ள அந்தோனி அல்பனீஸுக்கு மோரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT