உலகம்

இலங்கை அதிபரின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்டத் திருத்தம்: அமைச்சரவை ஒப்புதல் அளிக்குமா?

DIN

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மகிந்த ராஜபட்ச தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா். 13 புதிய அமைச்சா்களும் நியமிக்கப்பட்டு பதவியேற்றனா்.

இந்நிலையில், அரசியலமைப்பின் 21-ஆவது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. அதிபரைவிட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் 19-ஆவது சட்டத் திருத்தம் அதிபா் கோத்தபய ராஜபட்ச கடந்த 2020-இல் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக அதிபருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கும் 20ஏ சட்டத் திருத்தம் அரசியலமைபப்புச் சட்டத்தில் சோ்க்கப்பட்டது. இந்த 20ஏ சட்டத் திருத்தத்தை இப்போது கொண்டுவரப்படவுள்ள 21-ஆவது சட்டத் திருத்தம் ரத்து செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து நீதித் துறை அமைச்சா் விஜயதாச ராஜபட்ச கூறியதாக ஞாயிற்றுக்கிழமை உள்ளூா் ஊடகம் ஒன்று தெரிவித்திருப்பதாவது:

இரட்டைக் குடியுரிமை பெற்றவா்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதையும் 21-ஆவது சட்டத் திருத்தம் தடுக்கும். தேசிய தணிக்கை ஆணையம், கொள்முதல் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரங்களை வலுப்படுத்தும் வகையில் அவை சுதந்திரமான ஆணையமாக்கப்படும். மேலும், புதிய சட்டத்திருத்தத்தின்படி, மத்திய வங்கியின் ஆளுநரை நியமனம் செய்வது அரசியலமைப்புச் சட்ட கவுன்சிலின் கீழ் கொண்டுவரப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

அதிபா் கோத்தபய ராஜபட்ச, கடந்த அதிபா் தோ்தலுக்கு முன்னதாக 2019, ஏப்ரலில் தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT