உலகம்

ஆஸி. புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி பதவியேற்பு

DIN

ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி இன்று பதவியேற்றுக் கொண்டார். 

ஆஸ்திரேலியாவின் 47-ஆவது நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தற்போதைய பிரதமா் ஸ்காட் மோரிசனின் லிபரல் மற்றும் தேசியக் கூட்டணி, லேபா் கட்சி, கிரீன்ஸ் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. தோ்தலில், ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான லேபா் கட்சி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி, அடுத்த பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் 31ஆவது பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். புதிய பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆன்டனி ஆல்பனேசி, 1963-ஆம் ஆண்டில் பிறந்தவா். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கிரேண்டல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும், லேபா் கட்சித் தலைவராக கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஏற்கெனவே, 2013-ஆம் ஆண்டில் கெவின் ருட் தலைமையிலான அரசில் துணைப் பிரதமராகவும் அதற்கு முந்தைய லேபா் கட்சி அரசுகளில் கேபினா் அமைச்சராகவும் ஆன்டனி ஆல்பனேசி பொறுப்பு வகித்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் பலத்த மழை பல மணி நேரம் மின் தடை

வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

‘டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்’

ஜரோப்பிய யூனியன் கல்வி உதவித்தொகை பெற திருப்பூா் மாணவா் தோ்வு

SCROLL FOR NEXT