உலகம்

ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்ற வடகொரிய அதிபர்!

DIN

வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் அதிபர் கிம் ஜோங் உன் கலந்துகொண்டதாகவும் அவரது உடலை சுமந்து சென்றதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

கிம் ஜோங் உன், ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து செல்லும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், 

தற்போதைய அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தை கிம் ஜோங் இல்-க்குப் பிறகு மகிய முக்கியத் தலைவராக அறியப்பட்டவர் ராணுவ மார்ஷல் ஹியோன் கோல்- ஹே(Hyon Chol-hae).

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராணுவ அதிகாரியின் இறுதிச் சடங்கில் அதிபர் கிம் ஜோங் உன் கலந்துகொண்டார். மேலும் அவரது உடலையும் சுமந்து சென்றார். மேலும் வீரர்கள், அதிகாரிகள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

அவரது பெயர் என்றும் நினைவு கூறப்படும் என கிம் ஜோங் உன் தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT