உலகம்

ஈரான் கட்டட விபத்தில் 14 பேர் பலி: மேயர் கைது

DIN

தென்மேற்கு ஈரானில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நகரின் மேயரை அதிகாரிகள் கைது செய்தனர். 

திங்களன்று மெட்ரோபால் கட்டடத்தில் கீழ் கட்டப்பட்டுவரும் 10 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 39 பேர் காயமடைந்தனர். அதேசமயம் இடிபாடுகளில் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக, அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் மீட்பு பணிக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஈரானின் பொருளாதார துணைத் தலைவர் மொஹ்சென் ரசாயி மற்றும் வஹிதி ஆகியோர் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

மேலும், மீட்புப் பணிகள் அப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT